Sunday 24 February 2013

எம்மிதய தெய்வமும் ; எம்மினிய தெய்வமும்...!!!

இதயமாகி தெய்வமாகிஇதய தெய்வமானாய்

புரட்சியாகி தலைவியாகி புரட்சித்தலைவியானாய்

கழகத்திற்கு நீர் காவல் தெய்வம் காவல் தெய்வத்திற்கு நீர் தான் கழகம்

எங்கள் இதயக் காட்டில் எப்போதும் விழும் இன்னிசை மழையே...

எங்கள் நெஞ்சிக் கூட்டில்எப்போதும் வாழும் இனிய கலையே....

வாழும் நாளெல்லாம் மக்களுக்கு நன்மையே நீர் இருக்கும் வரை மக்களுக்கு வசந்தகாலமென்பது உண்மையே..

கோபாலபுர கோயபல்ஸ் ற்குசிம்ம சொப்பனமாய் கடைக்கோடி தமிழனுக்கு அம்மாவும் அப்பனுமாய்

உன்னை தடை செய்ய கோடி சூழ்ச்சி செய்தான் கோல்மால் அரசன் ; அதற்கு விடை கொடுத்தாய் துணிச்சலின் தோழியாக நின்று..!

அறிவு உன்னிடம் வகுப்பு எடுக்கச் சொல்கிறது அறிவைப் பற்றி அறிய

துணிச்சல் உன்னிடம் தொடர்பு கொள்ள துடிக்கிறது துணிச்சலை தொடர...!

திட்டம் போட்டு திருடிய கும்பலை ஒழிக்க சட்டம் போட்டு சிறையிலடைக்க செங்கோல் எடுத்தாய் செல்வியே பெரும்போர் தொடுத்தாய் உண்மையே...!

தமிழர்கள் வாங்கிய வரம் நீ கிடைத்ததுதமிழ்நாட்டிற்கு உரம்நின்செயல்களின் பயன்பாடு

எண்ணற்ற மக்கள் நலத்திட்டம் - அடங்கியது எண்ணற்ற ரௌடிகள் கொட்டம்அதற்கென்றே பிரத்யேக சட்டம் அமுங்கிப் போனது அயோக்கியர்களின் ஆட்டம்...!!!

என் தாயே என் குருவேஎன் தெய்வமே என் எல்லாமுமே...!!!

நின் இமைமுடி அசைவிற்கு என் உழைப்பை நல்கும் உம் உண்மை தொண்டம்மா நின் ஆள் காட்டி விரலுக்கு என் தோள்காட்டி நிற்கும் தொண்டன் நானம்மா..

உம்தலைமையில்ஒரேகோட்டில் நிற்கும் ஒன்னரை கோடி தொண்டர்களில் ஒருவனம்மா நான்..

நின் நாமம் கேட்கும் பொழுதெல்லாம் இறைப்பாடல் கேட்கும் பக்தனாய் நானம்மா

நின் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் சிலிர்த்து கொள்ளும் என்னுடல் என்பது உண்மையம்மா...

நீர் காட்டும் வழியில் எம்விழி செல்லும் நின் புகழை நாளும் எம் தமிழ் சொல்லும்

நின்னை நான் நினையாத நாள் எப்போதுமில்லை நின் கோடிக்கணக்கான பக்தர்களில் நானுமொரு பிள்ளை

எம் இதயதெய்வமேஎம் இருதய இயக்கமே எம் புரட்சித்தலைவியே எம் மிரட்சித்தலைவியே

நீர் பிறந்ததால் இத்தினம் பெற்றது சிறப்பு எம்மின மக்களுக்கு சிறப்பு நின் பிறப்பு

சிறப்பைக் காட்டிலும் சிறப்பைப் பெற்ற சீர்மிகு செந்தமிழே சிந்தாத அமுதே

மதியைக் காட்டிலும் மதியைப் பெற்ற மாண்புமிகு மதியரசே அம்மா என்றால் அரள்கிறதுமன்மோகனின் மத்தியரசே

தனித்துவும் மிக்க தமிழரசேதன்னம்பிக்கை மிக்க தமிழக அரசே

தமிழகத்தின் தலை எழுத்தே தனாகுட்டி போன்றோரின் உயிரெழுத்தே

தங்கத்தாரகையே சிங்கத் தலைமையே

உம்மை வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்த வயதில்லை என்பதால் உம்மை நினைத்து உவகையடைகிறேன் வாழ்த்தாத உயிரில்லை என்பதால்..

கழகத்தொண்டர்கள் சார்பாகவும் சக தமிழர்களின் சார்பாகவும் வணங்கி மகிழ்கிறேன்...

''ஒன்னரைக் கோடி போர்வாளில் ஓர் வாள் ''--தனாகுட்டி...

No comments:

Post a Comment